- Johnpaul J
Siluvai Sumantha Uruvam - சிலுவை சுமந்த உருவம்
Updated: Jul 19
சிலுவை சுமந்த உருவம் சிந்தின இரத்தம் புரண்டோடியே நதிபோலவே பாய்கின்றதே நம்பி இயேசுவண்டை வா
நம்பி இயேசுவண்டை வா
1. பொல்லா உலக சிற்றின்பங்கள் எல்லாம் அழியும் மாயை
பொல்லா உலக சிற்றின்பங்கள் என்றும் அழியும் மாயை
காணாய் நிலையான சந்தோஷம் புவியில் கர்த்தாவின் அன்பண்டைவா
காணாய் நிலையான சந்தோஷம் புவியில் கர்த்தாவின் அன்பண்டைவா
சிலுவை சுமந்த உருவம் சிந்தின இரத்தம் புரண்டோடியே நதிபோலவே பாய்கின்றதே நம்பி இயேசுவண்டை வா
நம்பி இயேசுவண்டை வா
2. ஆத்தும மீட்பைப் பெற்றிடாமல் ஆத்மம் நஷ்டமடைந்தால்
ஆத்தும மீட்பைப் பெற்றிடாமல் ஆத்மம் நஷ்டமடைந்தால்
லோகம் முழுவதும் ஆதாயமாக்கியும் லாபம் ஒன்றுமில்லையே
லோகம் முழுவதும் ஆதாயமாக்கியும் லாபம் ஒன்றுமில்லையே
3. உந்தன் பெலத்தில் வாழ்ந்திடாதே
நிம்மதி நீ இழப்பாய்
உந்தன் பெலத்தில் வாழ்ந்திடாதே
நிம்மதி நீ இழப்பாய்
கர்த்தர் என் தஞ்சம் என்று நீ உணர்ந்தால்
நிம்மதி நீ பெறுவாய்
கர்த்தர் என் தஞ்சம் என்று நீ உணர்ந்தால்
நிம்மதி நீ பெறுவாய்
சிலுவை சுமந்த உருவம் சிந்தின இரத்தம் புரண்டோடியே நதிபோலவே பாய்கின்றதே நம்பி இயேசுவண்டை வா
நம்பி இயேசுவண்டை வா